ஊத்தங்கரையில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
*கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில்*
*தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து*
*அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம் ஆர்ப்பட்டம் நடைபெற்றது*
*கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியும்* ,
*மிரட்டும் விதமாக இருந்தது,மேலும் அவர் தொடர்ந்து* *தமிழகத்தில் உள்ள* *செய்தியாளர்களை*
*அவமானப்படுத்தும் வகையில் ஈடுபட்ட*
*வரும் போக்கைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு*
*கிழக்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார்*,
*கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய திருவள்ளுவர் *பத்திரிக்கையாளர்கள்*
*சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் டி ஆர் கவியரசு*
*கண்டன சிறப்புரையாற்றினார்*
*பிறகு செய்தியாளரை சந்தித்த அவர்...*
*தமிழகத்தில் இதுபோன்ற எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் செய்தியாளர்களை அவமதித்தது இல்லை என்றும்*,*முட்டாள்தனமான போக்கை அண்ணாமலை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலைக்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றும், ஊடகம் முன்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தான் தோன்றி தானமாக* *செயல்படும்* *அண்ணாமலை அவர்கள் இனிவரும்* *காலங்களில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்,இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட* *தலைநகரங்களிலும்*
*கண்டன போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.*
*அப்போது மாநில பொது செயலாளர் தென்னரசு*மாநில* *அமைப்பாளர்* *ராஜாராம்,மாநில இணை செயலாளர்கள் தமிழ்குமரன்*,*சங்கர்*,*மாநில மகளிர் அணி செயலாளர் பத்மா மாரியப்பன்*
*தருமபுரி மாவட்ட தலைவர் சிற்றரசு, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு, தமிழன் செய்தியாளர் மு.அருள், கேப்டன் செய்தியாளர் ஆர்.காளிதாஸ், மக்கள் முகம் இரா.ஜீவன் உள்ளிட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு,தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தேசிய மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு செய்தியாளர்கள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரல்வளை எழுப்பி பெரும் அதிர்வை உண்டாக்கினர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.*