ஜனவரி 24ல் சோமரசம்பேட்டையில் மறியல் போராட்டம்

ஜனவரி 24ல் சோமரசம்பேட்டையில் மறியல் போராட்டம்

தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் AITUC உள்ளாட்சி பணியாளர் சங்கம் AITUC ஜீவா ஆட்டோ தொழிலாளர் சங்க   மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் 8.1.2023 மாலை 4.00 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள AITUC தலைமை அலுவலகத்தில் கட்டட சங்க மாவட்ட துணைச் செயலாளர் தோழியர் M மருதம்பாள்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்களும் மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தினார்கள் கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் தோழியர் S முத்துலெட்சுமி தோழர் S முத்தழகு தேசிய குழு தோழியர் D நிர்மலா உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழியர் J நதியா தரைக்கடை சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் K மேகராஜ் ஆட்டோ சங்கம் வாசன் சிட்டி செயலாளர் தோழர் பழனியாண்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது* 

*ஜனவரி 24ல் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தின் தொடர்ச்சியாக சோமரசம்பேட்டையில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது மறியலில் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள கட்டட தொழிலாளர்கள் உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆட்டோ தொழிலாளர்கள்  மாணவர்கள் இளைஞர்கள் தரைக்கடை வியாபாரிகள் நூருநாள் பணியாளர்கள் கோயில் மனை குடியிருப்போர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் பங்கேற்க இருக்கிறார்கள்* 

*மறியல் போராட்டத்தின் கோரிக்கைகள்* 

*கட்டுமான தொழிலாளர்களை புதிதாக சேர்ப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி கையொப்பம் இடுவதை ரத்து செய்ய வேண்டும்* 

*பெண்களுக்கு 50 வயதில் ரூபாய் 6000 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்* 

*பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து செலவையும் வாரியம் ஏற்க வேண்டும்* 

*ESI PF திட்டத்தை கட்டட தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்* 

*இயற்கை மரணம் விபத்து மரணம் குடும்ப ஓய்வூதியம் திருமணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உயர்த்தி வழங்க வேண்டும்* 

*கட்டடத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கும் ரூபாய் 4 லட்சத்தை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் அனைவருக்கும் எளிமையான முறையில் விரைவில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்*

*தீபாவளி பொங்கல் காலங்களில்  பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலத்தில் வழங்குவது போல தமிழ்நாட்டிலும் போனஸ் வழங்க வேண்டும்* 

*உள்ளாட்சி பணியாளர்களை ஊராட்சி பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்* 

*தூய்மைப் பணியாளருக்கு சம்பள உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும்* 

*தூய்மைப்  பணியாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கக்கூடிய சம்பளம் ரூபாய் 3600யை  மாதத்தில் ஒரு தேதியில் முடிவு செய்து மாதம் மாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல பஞ்சாயத்தில் மூன்று மாதம் நான்கு மாதம் இரண்டு மாதம் என நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*

*ஆட்டோ தொழிலாளர்களுக்கு FC காலங்களில் 10 ஆயிரம் நிதி வழங்க வேண்டும்* 

*ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானியத்தில் கடன் வழங்க வேண்டும்* 

*உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 24ல் மறியல் போராட்டம் நடைபெறும் இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் தோழர் S முத்தழகு நன்றி கூறினார்* 

*தோழமையுடன்*
 *MR முருகன்* 
*திருச்சி மாவட்ட தலைவர்* 
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம்* 
*தொடர்புக்கு 8428053002 நன்றி*
Previous Post Next Post