இயற்கையை பாதுகாத்து வரும் வனத்துறை அதிகாரிக்கு ஒரு சல்யூட்.......

இயற்கையை பாதுகாத்து வரும் வனத்துறை அதிகாரிக்கு ஒரு சல்யூட்.......


06.01.2023
ஆவணம்: 3
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா


தேனி மாவட்டம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் சூழ்ந்த மூலிகை செடிகளும் விலை உயர்ந்த மரங்களும் அரிய வகை வன உயிரினங்களும் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளும் நிறைந்த இறைவனின் அருட்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது இங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் காட்டு தீ மற்றும் சமூக விரோதிகளால் ஏற்படுத்தப்படும் செயற்கை தீ மற்றும் அடர்ந்த முட்புதர்களால் இந்த மலைகளில் உள்ள நிறைய இடங்கள் உள்ள தாவரங்கள் அழிந்த வண்ணம் இருந்த நிலையில் தேவதானப்பட்டி வனச்சரகர் திரு டேவிட் ராஜன் அவர்கள் இடைவிடாது இரவு பகல் சீரிய முயற்சியினால் அப்பகுதியில் உள்ள முட்புதர்கள் மற்றும் கருகிய நிலையில் உள்ள தாவரங்களை அகற்றி மூன்று லட்சத்திற்கும் மேல் உள்ள மரக்கன்றுகளை நட்டு அதை வளர்த்து இயற்கையை பாதுகாத்து வருகிறார் வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனமார பாராட்டி வரவேற்கின்றனர்.
Previous Post Next Post