தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தேவாரம் கிளை நிர்வாகத்தை கண்டித்தும் ஐந்து விதமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் இரண்டு நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
07.01.2023
ஆவணம் 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் தேவாரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 23 பேருந்துகள் கோயம்புத்தூர் திருச்சி திண்டுக்கல் சென்னை மற்றும் அண்டை மாநிலங்களான குமிழி மூணார் போன்ற வழித்தடங்களுக்கு இந்த பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தேவாரம் கிளை போக்குவரத்து பனிமனையில் சுமார் 150 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வழித்தடத்திற்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளை வேறு வழித்தடத்திற்கு மாற்றாமல் இயக்க நடவடிக்கை எடுக்க கோரியும், நியாயமான விடுப்புகளை மறுக்காமல் இருக்கவும், தரமான உதிரி பாகங்கள் வழங்கி பேருந்துகளின் பராமரிப்பு மேம்படுத்த வேண்டும் என்பன போன்ற ஐந்து விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை வளாகத்திற்குள் சி ஐ டி யு சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிமனை வளாகத்திற்குள் உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்