வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!
06.01.2023
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வனச்சரகம் ராஜகோபாலன்பட்டி ரேஞ்சர் அருள்குமார் அவர்கள் தலைமையில்
திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஊர்ப் பொதுமக்களுக்கு ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் க.கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வெயில் பருவகாலத்தை முன்னிட்டு வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து காட்டுதீயினால் ஏற்படும் உயிர் சேதங்கள் பற்றியும் வன உயிர்சேதங்கள் ஏற்படாமல் எப்படி தடுப்பது பற்றியும் செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இந்த நிகழ்வில் பயர்வாலண்டரி பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.