தேனி வைகை அணை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற 10 கண்மாய்களுக்கான மீன் வளர்க்கும் குத்தகை உரிமம் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ....

தேனி  வைகை அணை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குனர்  அலுவலகத்தில் நடைபெற்ற 10 கண்மாய்களுக்கான மீன் வளர்க்கும் குத்தகை உரிமம்  ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ....

06.01.2023
ஆவணம்: 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா



தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்  குள்ளப்புரம் சிறுகுளம் கண்மாய்,கீழ வடகரை பட்டத்திக்குளம் ,பெரியகுளம் வடகரை கடம்பன் குளம் , சின்ன பூலாங்குளம் , வேலன் குளம் , ஜெயமங்கலம் புதுக்குளம் ,தென்கரை பாப்பையன்பட்டி குளம் ,வடவீரநாயக்கன்பட்டி பூவாலசேரி கண்மாய் ,மேல்மங்கலம் நெடுங்குளம் கண்மாய் ,தாமரைக் குளம் கண்மாய் ஆகிய 10 கண்மாய்களில் மீன் வளர்ப்பும் குத்தகை உரிமம் ஏலம் இன்று 5.1. 2023-ம் தேதி  வைகை அணை பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சூழலில் மாதம் ஏலம் விடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் மீன்வளத் துறையினர் ஈடுபட்டனர். முதலாவதாகவேலன் குளம் ஏலம் விடப்பட இருந்தது. ஏலம் எடுக்க வந்தவர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவி வந்த நிலையில் வேலன் கண்மாய் ஏலம் சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சிறுகுளம் கண்மாய் ஏலம் விடப்பட இருந்தநிலையில் இக் கண்மாய்க்கு மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஏலம் எடுக்க வந்தனர். ஏலம் எடுக்க ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு தராததால் ஏலம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாக ஏலம் எடுக்க வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பு உருவானது.. மேலும் 10 கண்மாய்களுக்கான ஏலம் என்பதால் காலை முதலே ஐநூறுக்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் குவிந்து இருந்தனர். பாதுகாப்பு பணியில் வைகை அணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான ஏராளமான போலீசார்  ஈடுபட்டிருந்தனர். 837 நபர்கள் வங்கி வரைவோலையுடன் ஏலம் எடுக்க வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post