அமமுக கட்சியினர்திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அமமுக கட்சியினர்
திமுகவை கண்டித்து   கண்டன ஆர்ப்பாட்டம் 

ராணிப்பேட்டை  மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து மின் கட்டண உயர்வு,  சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை திரும்ப பெறவும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த  அம்மா திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும்,

 வலியுறுத்தி மாநில தேர்தல் பிரிவு செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என் ஜி பார்த்திபன் தலைமையில் நகர கழக செயலாளர் தனசேகரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன், துணை செயலாளர் ஆதம்சாயுப், சரளா தினகரன் உள்ளிட்ட  மாவட்ட கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக

 நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post