*ஆற்றல் அறக்கட்டளை மற்றும் ஆசிரியர்கள் "கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு" மரம் நடும் விழா.*
மதுரை யானைமலை ஒத்தக்கடை ஆற்றல் அறக்கட்டளை மற்றும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் நலச் சங்கம் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு "மரக்கன்று நடும் விழா" அரசு மாணவர் விடுதி காப்பாளர், மாநில செயலாளர் பாண்டியராமன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் யானைமலை ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலாளர் நாகஜோதி சிறப்புரை ஆற்றினார், மாநிலத்தலைவர் ஆசிரியர் கணேஷ்குமார், மதுரை மாவட்டத் தலைவர் முனைவர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர், பேராசிரியர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனைவர் தமிழரசன், வழக்கறிஞர் ஜெயராமன், ஆசிரியர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
உமாஜெயராமன், இராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சிலம்பம் மாஸ்டர் பாண்டி, வி.சி.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் மரக்கன்று நட்டு வைத்து, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும், முனைவர் பட்டம் பெற்ற டாக்டர்.முத்துமணி என்பவருக்கு ஆற்றல் அறக்கட்டளை சார்பாக பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆற்றல் அறக்கட்டளை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரபீக் ராஜா வாழ்த்துரை வழங்கினார், பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் செயலாளர்கள் பாலமுருகன், ராஜபாண்டி, சதாம், கலை ஸ்டூடியோ மணிகண்டன் மற்றும் மக்கள் தொடர்பு, செய்தியாளர் பாண்டியன் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர். இறுதியாக ஆ.அ சஞ்சய் நன்றியுரை கூறினார்.
இதில், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.