அதிமுக தலைவரா திமுக உறுப்பினர்களா அரியூர்நாடு ஊராட்சி அக்கப்போர்

அதிமுக தலைவரா 
திமுக உறுப்பினர்களா
அரியூர்நாடு ஊராட்சி அக்கப்போர்



நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில், 9வார்டுகள் கொண்ட  அரியூர் நாடு ஊராட்சியில்  நடைபெற்று முடிந்த  உள்ளாட்சி மன்ற தேர்தலில் 4 வார்டுகளில் அதிமுகவினரும், 5 வார்டுகளில், திமுகவினர்  வெற்றி பெற்றனர்  இந்தநிலையில்  அதே ஊராட்சியை சேர்ந்த நாகலிங்கம் என்பவர் அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு நின்று    போட்டியிட்டு  வெற்றி பெற்றார்,

ரவிக்குமார்        தலைவர்நாகலிங்கம் 

இவரின் தலைமையில் ஊராட்சி மன்றம் நடைபெற்று வந்த நிலையில்   கடந்த ஜூன் 1-ஆம் தேதியன்று  திமுக கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வனிதா நேரு, ரூபிணி சம்பத், முத்துசாமி, சசிகலா ரவிக்குமார், நீலாமணி செல்வராஜ், ஆகியோர் ரவிக்குமார் தலைமையில்  மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் நாகலிங்கம் மீது புகார் மனு அளித்தனர்

 அந்த மனுவில் கூறியிருப்பதாவது  தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும்,  ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு   சொல்ல மறுத்ததாகவும்,  எலக்சனுக்கு  ரூபாய் 40 லட்சம் செலவு செய்ததாகவும், அந்த பணத்தை கொடுத்து விட்டு வரவு செலவு கணக்கு கேளுங்கள் என்று தலைவர் சொன்னதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

 இந்த சம்பவம் குறித்து அரியூர் நாடு ஊராட்சியில் கள ஆய்வில் ஈடுபட்டபோது  பல  அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன   ரவிக்குமார் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் 
 தலைவர் நாகலிங்கத்திற்கு
 மக்களிடம் வரவேற்பு  அதிகமானதை  விரும்பவில்லை இதனால் இவர்களுக்கு  தலைவர் நாகலிங்கம் மீது காழ்ப்புணர்ச்சி அதிகரித்திருக்கிறது 

 ஏற்கனவே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு  5 பேர்  போட்டியிட்டனர் அதில் 568 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் என்பது  ஏற்கனவே இவர் மீது இருந்த பொறாமை, வெறுப்பு,  ஈகோ பிரச்சனை, அரசு அனுமதி இல்லாமல்  கிழக்கு வளவு  பகுதியில் திமுக3-வது வார்டு உறுப்பினர் ரூபிணி சம்பத், புதுவளவு மேல்களஞ்சியம் பட்டி பகுதியில் 
  6வது வார்டு உறுப்பினர்

 நிலாமணி செல்வராஜ், ஆடுவாம் கூட்டுப்பட்டி தனிநபர் ஒருவர், குளிவளவு பகுதியில்  1வது வார்டு உறுப்பினர் வனிதாநேரு  ஆகியோர், ஆளும் கட்சியை சேர்ந்த   சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமி,எம்பி சின்னராசு, ஒன்றிய செயலாளர் செந்தில் முருகன், ஆகியோரின் ஆதரவோடு மது பாட்டில்களை வாங்கி வந்து   சட்டத்துக்கு விரோதமாய் விற்பனை செய்து வருவதை  தடுப்பதற்கு தலைவர் நாகலிங்கம் செம்மேடு  காவல் நிலைய போலீசாருக்கு  தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வந்திருக்கிறார்

 ஆளுங்கட்சியின் ஆதரவு மேற்கண்ட நபர்களுக்கு பலமாக இருப்பதால் செம்மேடு போலீசார்  நடவடிக்கை எடுக்காமல்  ஆதரவளித்து வருகின்றனர்    மேலும் திமுக வார்டு உறுப்பினர்கள் தலைவர்   நாகலிங்கமிடம்  ஊராட்சியில் வரும் ஒவ்வொரு வேலையிலும் 5% சதவீதம் கமிஷன் கொடுக்க  வேண்டும் என்று மிரட்டி   வருவதாகவும் கூறப்படுகிறது  ஊராட்சியில் வரும் வேலைகளை பிரித்து  தரவேண்டும்  என்ற கட்டளைகட்டளையிடுவதாகவும் சொல்லுகிறார்கள் 

 இதற்கெல்லாம் பிடிகொடுக்காமல் தலைவர் நாகலிங்கம்  செயல்பட்டு வருவதால் அதனை பொறுத்துக்கொள்ள   முடியாத திமுகவினர் தலைவரை  செயல்பட விடாமல் முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு,   ஒன்று சேர்ந்தது  தெரியவருகிறது
 இது சம்பந்தமாக  திமுக உறுப்பினர்களின் குழு தலைவர் ரவிக்குமார் சசியிடம்
 கருத்து கேட்டோம் 

தலைவர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அவர் கூறியதாவது தலைவர் நாகலிங்கம் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்,   ஊராட்சி மன்றக் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கொடுக்க மறுத்து வருகிறார், ஊராட்சியில் எந்த வேலை வந்தாலும் வார்டு உறுப்பினர்களுக்கு பிரித்துத் தராமல் தன்னிச்சையாகவே செயல்படுகிறார்  என்றார்

 மேலும் அவரிடம் ஊராட்சி மன்றக் கூட்டங்களில்  மனைவி தான் உறுப்பினர் என்றால் உறுப்பினர் அல்லாத கணவன்மார்களும்  மனைவியுடன் சென்று தொந்தரவு கொடுப்பதாக சொல்லுகிறார்கள் இது உண்மைதானா? என்று கேட்டதற்கு அவர் உண்மை இல்லை பொய் என்கிறார் உங்கள்  ஊராட்சியில் வரும் ஒவ்வொரு வேலையிலும் 5 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களாமே? இது பற்றி உங்களுடைய கருத்து என்ன? 

அதற்கு அவர்  ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும்  என்றார் அதனைத் தொடர்ந்து
 ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கமிடம் தொடர்புகொண்டு 
உங்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் திமுக உறுப்பினர்கள்  மனு கொடுத்திருக்கிறார்கள்  நீங்கள் உறுப்பினர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக சொல்கிறார்களே இதுகுறித்து நீங்கள் என்ன? சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது 

அவர் கூறியதாவது என் மீது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததற்கு முக்கிய காரணம் ஈகோ பிரச்சனையும் பொறாமையும் தான்,  ஊராட்சி மன்றக் கூட்டங்களில் உறுப்பினரை தவிர வேறு யாரும் பங்கேற்க கூடாது என்று திட்டவட்டமாக சொன்னதால், வார்டு உறுப்பினர்களான  பெண்களின் கணவர்கள்    என்மீது பொறாமை கொண்டு எனக்கு விரோதமாக செயல்படுகிறார்கள், 

 மேலும் மனைவி வார்டு உறுப்பினராக இருக்கும்போது கணவன் வந்து  ஊராட்சி  செயலாளரை மிரட்டி தீர்மான பதிவேட்டில் கையொப்பம் மிட்டதை தட்டிக் கேட்டேன் , மது பாட்டில்கள் விற்பனையை தடுக்கிறேன்,   தற்போது சுமார் 4 கோடி மதிப்பீட்டில் ஊராட்சியில் மகளுக்கான அடிப்படை வசதி  செய்து தந்திருக்கிறேன் மேலும் நான்கு முகாம்கள் நடத்தி  ஊராட்சி பகுதி வாழ் மக்களுக்கு 350 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு  ஏற்பாடு செய்து தந்தேன் 

இதனால் எனக்கு மக்கள் மத்தியில் 
  எனக்கு வரவேற்பு அதிகமானதால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவே என்னை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும்  என்னை செயல்பட விடக்கூடாது என்றெல்லாம் ஆலோசனை செய்து, என் மீது பொய்யான புகார் கொடுத்து  இருக்கிறார்கள்  இந்த புகார் சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்  என்றார்

அரியூர் நாடு ஊராட்சியில் வாழும் மக்கள் மலைவாழ் ஒரே  சமூகத்தை சார்ந்தவர்கள், 
 ஒரே சமூகத்தை  சேர்ந்தவர்களாக இருந்தாலும்  கட்சியின் வேறுபாடும்,பொறாமை எண்ணங்களும் திமுக உறுப்பினர்களை ஆட்கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது  இவர்கள் தங்கள் மனநிலையை மாற்றி திருந்த வேண்டும்  என்பதே அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது

இஇவர்களின் விருப்பம் நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Previous Post Next Post