திமுக ஆட்சியின் அவல நிலை. JC பள்ளியின் அடாவடித்தனம்

திமுக ஆட்சியின் அவல நிலை. JC பள்ளியின் அடாவடித்தனம்
........................................................

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயங்கிவரும் சென்டான்ஸ் ஜெ.சி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி நிர்வாகம் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி கட்டணம் கட்டாததால் நேற்று முதல் நடைபெற்று வரும் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக  குற்றச்சாட்டு கூறி  மாணவர்களின் பெற்றோர் தனியார் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தனியார் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைகளில் தரையில் அமர்த்தி உட்கார விற்பதாகவும், நேற்று துவங்கிய ஆண்டு பொதுத்தேர்வில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுதியபோது பாதியிலேயே தேர்வுத் தாள்களை பறித்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு கூறுகின்றனர். மேலும் இன்று தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதவிடாமல் நிறுத்தி வைத்ததாகவும் இதில் பெற்றோர்கள் செலுத்த வேண்டிய தொகையை தேர்வு முடிவுகள் செலுத்துகிறேன் என்று கூறியும் பள்ளி நிர்வாகம் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்து பள்ளி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்போம் என்றும் இல்லையென்றால் உங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியதால் பள்ளி மாணவர்களை கூட்டி வந்த பெற்றோர் பள்ளி வளாகத்திற்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்ற கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்ற இதுபோன்ற தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Previous Post Next Post