தேனி அறிவியல் நாடார் சரஸ்வதி கல்லூரியில் பட்டமளிப்பு விழா தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி அறிவியல் கல்லூரியில் இந்து நாடார் உறவின்முறை சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

தேனி அறிவியல் நாடார் சரஸ்வதி கல்லூரியில் பட்டமளிப்பு விழா தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி அறிவியல் கல்லூரியில் இந்து நாடார் உறவின்முறை சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார் பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார் கல்லூரியின் செயலாளர் காளிராஜ் இணைச் செயலாளர்கள் சுப்புராஜ் வன்னியராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் முன்னதாக கல்லூரியின் முதல்வர் வரவேற்றார் இவ்விழாவில் மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார் இவ்விழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன விழாவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது
Previous Post Next Post