செங்கத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு...
தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் உத்தரவிற்கிணங்க தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மக்களின் தாகம் தணிக்க மாவட்டம் மற்றும் தாலுக்காவில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் வி எம் நேரு ஆலோசனைக்கு இணங்க முதல் முதலில் வியாழக்கிழமை அன்று சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தேமுதிக நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் தண்ணீர்பந்தல் நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைக்க சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் வி எம் நேரு பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி ,மோர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வெயில் காலம் முடியும் வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என நகர செயலாளர் ராமமூர்த்தி இடம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ஸ்ரீ குமரன், மாவட்ட துணை செயலாளர்கள் சிவசங்கர், தமிழன்னை பாபு, முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சாபு சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெய்சங்கர் சிகாமணி, செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜேசிபி சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர்கள் கண்ணியப்பன், கோவிந்தன் ,மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சாரதி, விநாயகம், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராமாபுரம் முருகன், வெங்கட் ,கிருஷ்ணன், வேலு, கேப்டன் மன்ற துணை செயலாளர் கோபி, செங்கம் நகர அவைத்தலைவர் பாலு, பொருளாளர் சிவபெருமாள், துணை செயலாளர்கள் ரபீக் பாஷா, எபினேசர் பிரின்ஸ், விநாயகமூர்த்தி, அன்பழகன், கேப்டன் மன்ற செயலாளர் அசோகன், கோயிலும் ஊராட்சி செயலாளர் ஜெமினி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.