கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எள்ளேரி புதுகாலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இதில் 1முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 35 மாணவமாணவிகள் பயின்று வருகின்றனர்
இதில் பல ஆண்டுகளாக பள்ளிக்கட்டிடம் இல்லாததால் சமையலறை கூடத்தில் மாணவர்கள் பயின்று வந்தனர் தற்போது காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அப்பள்ளிக்கு பள்ளிபுரனமைப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்து தற்போது 18.50லட்சம் ரூபாயில் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
இன்று சட்டமன்ற உறுப்பினர்
*சிந்தனை செல்வன்* அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் *ஞானஜோதி*
ஊராட்சி மன்ற தலைவர்
*பிரமிளா சங்கர்*
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
பசுமை வளவன்
மணவாளன்
கஸ்பாபாலா
செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.....
செய்தியாளர்.....
*மன்னை மாயா*