வாலாஜாவில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
சொத்து வரி உயர்வை ஏற்றிய தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாலாஜா நகர செயலாளர் டபுள்யு ஜி மோகன் பேசினார் அதனைத் தொடர்ந்து மாவட்ட இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை பேசினார் அவர் பேசியபோது ராணிப்பேட்டை திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தி திமுக ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே
ராணிப்பேட்டையில் உள்ள கேபிஎஸ் மண்டபத்தை விலைக்கு வாங்கினார் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள தனியார் கல்லூரியை ரூபாய் 150 கோடிக்கு விலை பேசி வருகிறார் ஆறுமாத காலத்திலேயே 200 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்
அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி பேசுகையில் மக்களுக்காக போராட கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் என்று பேசத் தொடங்கினார் இன்றைக்கு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும்
முக.ஸ்டாலின் ஆட்சிம அராஜக ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, செய்து கொண்டு வருகிறார் இதனைத் தட்டிக் கேட்கும் ஒரே இயக்கம் அதிமுக என்றார்
மு க ஸ்டாலின் சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார் எந்த ஆறும் ஓடவில்லை ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மக்களுக்கு இரண்டு பரிசுகளை கொடுத்திருக்கிறார் ஒன்று பொங்கல்பரிசு இன்னொன்று சொத்து வரி உயர்வு தரமற்ற 21 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு கொடுத்ததால் சந்து சிரிச்சு போச்சு ராணிப்பேட்டை
காந்தி பேசும்போது சொல்லுகிறார்
உலகத்திலேயே நம்பர் 1 முதல்வர் ஐயா
முக.ஸ்டாலின் மட்டும்தான் என்று சொல்கிறார் இந்தப் பொங்கல் பரிசு கொடுத்ததில் சந்து சிரிச்சி போச்சு தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்றார் இரண்டாவதாக சொத்து வரி உயர்வு அதிமுக பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது எந்த வரியையும் உயர்த்தவில்லை வீட்டு வரி மட்டுமே கொஞ்சம் உயர்த்தியபோது அதற்கு திமுக போராட்டம் நடத்தியது
ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 525 வாக்குறுதிகளை கொடுத்திருந்தார் அதில் 487வது வாக்குறுதி என்னவென்றால் கொரோனா காலம் முடிவடைந்து மக்கள் மேம்பாடு அடையும் வரை நாங்கள் சொத்து வரியை ஏற்றுவது இல்லை என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் ஆனால் இந்த வாக்குறுதியை இப்பொழுது மீறப்பட்டுள்ளது 600 சதுர அடிக்கு 25 சதவீதம் வரி உயர்வு, 1200 சதுர அடிக்கு சொத்து வரி உயர்வு 50% ,
1800 சதுர அடிக்கு 75% 1800 சதுர அடிக்கு மேல் உள்ள சொத்துக்களுக்கு 100% வணிக நிறுவனங்களுக்கு 100% இந்த சொத்து வரி உயர்வால் குழாய் வரி, வீட்டு வாடகை உயர்வு, வீட்டுமனைகள் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
அதிகரிக்கும் இந்த சொத்து வரி உயர்வால் திமுக அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றார் எனவே சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்
சொத்துவரி ஏன் உயர்த்தப்பட்டது இதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அமைச்சர்
கே.என். நேரு அதற்கு பதிலளித்தார் மத்திய அரசு பிப்ரவரி 31 ஆம் தேதிக்குள்
சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து எனவே சொத்து வரி உயர்வை நாங்கள் அமல்படுத்தினோம் என்று விளக்கம் அளித்தார்
மத்திய அரசுக்கு அடிமையற்ற சுயமரியாதை புலிகளாட்சே நீங்கள்
அதிமுக மத்திய அரசுக்கு அடிமையான அரசு என்றெல்லாம் சொல்கிறீர்கள் மத்திய அரசு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பொதுவிநியோகத் திட்டம் 20 கிலோ இலவச அரிசி வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்
இதயதெய்வம் அம்மா தொடங்கி வைத்த ஏழை எளிய மக்களுக்கான இந்த திட்டத்தை நீங்கள் மானியம் வழங்காவிட்டாலும் செய்யமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டோம்
இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் அடிமையா? நீங்கள் அடிமையா? என்ற கேள்வி முன்வைத்தார் மேலும் அவர் பேசுகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியில் பேச்சு சுதந்திரம்இல்லை
மது ஆலைகள் மூடப்படும் என்றும் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று
கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார் மது விளக்கு கொண்டு வரவில்லை மது ஆலைகளும் மூடப்படவில்லை என்றார்
தமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது பேருந்தில் பள்ளி மாணவிகள் பீர் குடித்து பஸ்ஸில் நடனம் ஆடுகின்றனர்
வகுப்பறையில் மாணவர்கள் பீர் மது அருந்துகின்றனர் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
என்றார் தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் 12 மணி முதல் இரவு 10 மணி
வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காலை 5 மணி முதல் 12 மணி வரை திமுகவினர் மதுபான கடைகளை நடத்தி வருவதாகவும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை லஞ்சம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார் இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் என்று கூறினார் மு க ஸ்டாலின் துபாய் பயணம் அரசுக்கான பயணம் அல்ல குடும்பத்திற்கான பயணமாக இருந்தது
என்றும் இவர்கள் சென்று வந்த தனி விமானத்திற்க்கு 5 கோடி ரூபாய் செலவானது என்றும் கூறினார் மேலும் அவர் பேசுகையில் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கோரினார் தொடர்ந்து பேசிய அவர் அன்புமணி ராமதாஸ் நன்றி கெட்டவர் என்றும் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது எடப்பாடியார் போட்ட பிச்சை என்றும்
சாடினார்
கும்பிட்ட கரங்கள் விலகுவதற்கு முன்னே அம்மா நீங்கள் வரம் கொடுத்தீர்கள் என்று சொல்லுவோம் சாப்பிட்ட கை காய்வதற்கு முன்னே நன்றி மறந்த கூட்டம் எதுவென்று சொன்னாள் அது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்றார் சட்டசபையில் அவசர சட்டம் ஏற்றி பாட்டாளி மக்களின் நலனுக்காக அவர்கள் வேலைவாய்ப்பு முதல் மற்ற எல்லாவற்றிலும் 10.5% உள் ஒதுக்கீடு செய்து அழகு பார்த்தவர் எடப்பாடியார்
ஆனால் ராணிப்பேட்டையில் அன்பு மணி ராமதாஸ் பேசும்போது ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிமுக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் முதலிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதாகவும் கூறியிருக்கிறார் இவர் தெரிந்து பேசினாரா அல்லது தெரியாமல் பேசினாரா தெரியவில்லை தமிழக சட்டமன்றப் பேரவையில் 65 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்
பாமக சார்பில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் அதுகூட ஓபிஎஸ் தயவினால் வெற்றி பெற்று வந்தீர்கள் இல்லையென்றால் அது கூட இல்லை பா மா க நடைபெற்ற நகரமன்ற உள்ளாட்சித் தேர்தலில்
பாமக 6 கவுன்சிலர்களும் பேரூராட்சி தேர்தலில் நான்கு கவுன்சிலர்களும் வெற்றி பெற்றுள்ளனர் ஆனால் அதிமுக ராணிப்பேட்டையில் 41 பேரூரராட்சி கவுன்சிலர்களும், 28 நகர மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவின் உருட்டல், மிரட்டல் இல்லை என்றால் 50% வாக்கு பெற்று வெற்றி பெற்றிருப்போம் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் போலீஸ் தான் என்று குற்றம் சாட்டினார் போலீஸ் திமுகவுக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் கூறினார் மேலும் அவர் பேசுகையில் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நகர பேரூர் கழகத்தில் வெற்றி பெற்ற திமுகவினர்
வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் என்றும் வாலாஜா 14 வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சுரேஷ் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இந்த இடத்தில் மளிகை கடைக்கு முன்பாக மினி டேங்க் வைக்கக்கூடாது அதனை தள்ளி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையில் நகர மன்ற தலைவர்,கமிஷனர், அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை தள்ளிவைக்க உத்தரவிட்டு இருந்தும்
நான் வைத்ததுதான் சட்டம் யார் சொன்னாலும் கேட்க கூடாது என்று மளிகை கடைக்கு முன்பாகவே மினி டேங்க் வைத்து அராஜகம் செய்து இருக்கிறார் வாலாஜா திமுக நகர செயலாளர் என்று குற்றம் சாட்டினார் திமுகவிற்கு நாட்களின் எண்ணிக்கை ஆரம்பமாயிற்று ஒரே தேசம், ஒரே தேர்தல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனவே கழகத் தோழர்கள் மக்கள் பணியாற்றி மகத்தான வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
என்று இவ்வாறு அவர் பேசினார்.