வாலாஜாவில் பாஜக 42-வது ஆண்டு துவக்க விழா

வாலாஜாவில் பாஜக 42-வது ஆண்டு துவக்க விழா
ராணிப்பேட்டை மாவட்டம்
6.04.22
 பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு   
வாலாஜா பேருந்து நிலையத்தில்  நகர தலைவர் காந்தி தலைமையில்  கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

 அதனைத் தொடர்ந்து  
பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம்  உரையாடும் நேரடி நிகழ்ச்சி வாலாஜாவிலுள்ள ராணி மஹாலில்  திரையில் ஒளிபரப்பப்பட்டது தொடர் நிகழ்வாக பிஜேபி கட்சியினர்   அங்கிருந்து  ஊர்வலமாகச் சென்று வாலாஜா பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியினை நிறைவு செய்தனர்   
 
இந்த நிகழ்ச்சியில் நகர பார்வையாளர் சம்பத் ,மாவட்டத் பார்வையாளர் எம் கே ரவிச்சந்திரன்,மாவட்டத் தலைவர் திரு விஜயன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்  
 விளையாட்டுத்துறை மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்
 மேலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான

மாவட்ட இளைஞரணி செயலாளர் மா சதீஷ்குமார், ரவிந்திரன், ஞானமூர்த்தி, யமுனா, ஹேமாவதி பிரகாஷ் உமாபதி, ஹரி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தியாளர் 
எஸ்.ஆனந்தன்
Previous Post Next Post