அஇஅதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்தில்நகரச் செயலாளர் பதவியில் இதுவரையில் என் வி. ராதா என்பவர் இருந்து வந்தார்.

பெரியகுளம் புதியநகரச் செயலாளர் ஒ.சண்முகசுந்தரம்?....




அஇஅதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில்
 தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்தில்நகரச் செயலாளர் பதவியில் இதுவரையில் என் வி. ராதா என்பவர் இருந்து வந்தார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் தங்கமகன் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் தோல்வியை சந்தித்தது..

இந்நிலையில் அதிமுகவை பெரியகுளம் நகரத்துக்குள் சரி செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படுத்த வேண்டும் என கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது நகரச் செயலாளர் பதவிக்கு மக்களிடத்தில் செல்வாக்கு உள்ளவராகவும் வெகுஜன மக்களை எளிதில் சந்திக்க கூடிய  ஒருவரை நகரச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டுமென கட்சி தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்..
தற்போது உள்ள சூழலில் பெரியகுளம் நகரச் செயலாளர் பதவிக்கு நகரத் துணைச் செயலாளர் அப்துல்சமது, தேனி மாவட்டஇளைஞர்-இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் நாராயணன்,

24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம் ஆகியோர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது  தகவல்கள் 

.இருப்பினும்கட்சித் தொண்டர்களிடமும் மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ள, ஓ.சண்முகசுந்தரம்
நகரச் செயலாளராக வந்தால் கட்சி பணியும்,
தொண்டர்கள் அரவணைப்பும்- புத்துணர்ச்சியோடு செயல்படுவார்கள் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நமது சிறப்பு செய்தியாளர் தேனி.எம்.சேதுராமன்
Previous Post Next Post