2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது வாலாஜா போலீசார் நடவடிக்கை


2 லட்சம் மதிப்பிலான  புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது வாலாஜா போலீசார் நடவடிக்கை 
ராணிப்பேட்டை மாவட்டம்
09.04.22

 வாலாஜா 
 நரஜோதிராவ் தெருவில் வசித்து வரும்  மலாம்சிங் என்பவரின் மகன் காலுசிங் வயது21, கோட்டிராம்  என்பவரின் மகன் ஜீவாராம் வயது 24 என்பவர்கள்
 ராஜஸ்தான் மாநிலம் கான்பூர்  பகுதியிலிருந்து வந்து வாலாஜாவில் தங்கி டைமண்ட் சாக்லேட் என்ற மொத்த வியாபார கடை நடத்தி வருகின்றனர்

  இந்த நிலையில்  அரசு தடை செய்திருக்கும் பான் மசாலா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலைப் பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக வாலாஜா போலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபு  வழிகாட்டுதலின் படி  வாலாஜா நகர காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான போலீசார்  உதவி ஆய்வாளர்கள்  சித்தரா, பாஸ்கரன், கோபி மற்றும் காவலர்கள் கொண்ட குழுவினர் 

  டைமன் சாக்லேட்  கடை மற்றும் குடோனில ஆய்வு  செய்தபோது  25க்கும் மேற்பட்ட சாக்குப்பையில் 400 கிலோ எடை கொண்ட சுமார்  2 லட்சம் மதிப்பிலான  புகையிலை போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை  கண்டுபிடித்தனர்   இதனை கைப்பற்றி  காலூசிங்,
 ஜீவாராம்   ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து  சிறையில் அடைத்தனர்.
Previous Post Next Post