தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு....
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
அந்தமனுவில்சிறப்பு காலமுறை ஊதியம் என்ற வரைமுறையை மாற்றி காலம் வரை ஊதியம் வழங்க கோரியும்,குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாயாக வழங்க கோரியும்,சத்துணவு களில் தேவையான எரிவாயு சிலிண்டரை அரசே வழங்க கோரியும்,விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு உணவூட்டி செலவினம் ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும்,அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க கோரியும்,ஆண் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, வேலைநிறுத்த காலத்திற்கானஊதியம் வழங்க கோரியும் -தமிழக முதல்வர் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை விரைவாக பரிசீலனைசெய்யக்கோரிமனுஅளித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பவானி ஜீவராஜ்,நகரத் தலைவர் லட்சுமி,நகர பொருளாளர் மகாலட்சுமி,நகரச் செயலாளர் சண்முகப்பிரியா,
துணைத்தலைவர் சுகிதா பானு,மாவட்ட இணைச்செயலாளர் மல்லிகா,செயற்குழு உறுப்பினர் வைரமணி உள்ளிட்ட சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்..மனுவைப் பெற்றுக் கொண்டஅதிகாரிகள்
தமிழக அரசின் கவனத்திற்குஎடுத்துச்
செல்வதாக தெரிவித்தனர்.