தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள கோனார்தெரு கிளை கூட்டம் 10.4.2022 காலை 10:45 மணி அளவில் கிளை தலைவர் தோழியர் விசாலாட்சி தலைமையில் கோனார் தெருவில் நடைபெற்றது மாலை 4.30 மணி அளவில் நாடார் தெரு கிளை கூட்டம் பெண்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா தலைமையில் நாடார்தெருவில் நடைபெற்றது 4.50 மணியளவில் புதுதெரு கிளை கூட்டம் மாவட்ட துணை தலைவர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் AITUC தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது 5.25 மணி அளவில் அல்லித்துறை கிளை கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழியர் S முத்துலெட்சுமி தலைமையில் அன்னை நகரில் நடைபெற்றது 6 மணி அளவில் நாச்சிகுறிச்சி இரண்டாவது கிளை கூட்டம் கிளை தலைவர் தோழியர் அம்சவள்ளி தலைமையில் நடுத்தெருவில் நடைபெற்றது 6.30 மணி அளவில் பாரதிநகர் கிளை கூட்டம் கிளை தலைவர் தோழியர் A தனலெட்சுமி தலைமையில் பாரதி நகரில் நடைபெற்றது 7 மணி அளவில் ஜோதிநகர் கிளை கூட்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு தலைமையில் ஜோதி நகரில் நடைபெற்றது 7.30மணி அளவில் நாச்சிகுறிச்சி கிளை கூட்டம் கிளைச் செயலாளர் தோழியர் B வித்யா தலைமையில் பாஸ்கரன் இல்லத்தில் நடைபெற்றது 8 மணி அளவில் அதவத்தூர் கிளை கூட்டம் ஒன்றிய துணைத்தலைவர் தோழியர் T சந்திரா தலைமையில் அதவத்தூரில் நடைபெற்றது 8.30 மணி அளவில் ஒன்றிய துணை செயலாளர் தோழியர் M பழனியம்மாள் தலைமையில் கீழத்தெருவில் நடைபெற்றது அனைத்து கூட்டத்திலும் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்துகொண்டு போராட்டத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார் அனைத்து கூட்டத்தையும் வாழ்த்தி மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு பெண்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா உள்ளிட்டோரும் மற்றும் விஜயா கற்பகம் குமரேசன் ஹேமலதா ராதா ரஷியாபேகம் பல்கீஸ்பானு ஜான்சி சுதா தனலெட்சுமி ஆரோக்கியராணி விசுவநாதன் பாப்பாத்தி மணி ராஜாம்பாள் ராமேஸ்வரி நிவேதா உள்ளிட்ட அனைத்து கூட்டத்திலும் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்*
*கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது*
*துரைக்குடியில் 128 தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா இன்றுடன் சுமார் 30 மாதம் ஆகியும் இடத்தை அளந்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் உடனே அந்த இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தியும்*
*தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அனைத்து உடலுழைப்பு பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதிலும் ஆண் தொழிலாளருக்கு 55 வயதிலும் மாதம் மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டி*
*பேறுகால உதவி நிதியை ஆறுமாத விடுப்புடன் ரூபாய் 90 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டி*
*குழந்தைகளின் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து செலவையும் வாரியமே ஏற்க வேண்டி*
*இயற்கை மரணம் நிதி உதவி ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டி*
*விபத்து மரண நிதி உதவி ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டி*
*மழைக்கால நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டி*
*பதிவு உள்ளிட்ட எந்தவித கேட்பு மனுவிற்க்கும் VAO சான்று கேட்பதை கைவிட வேண்டி*
*பண்டிகைக் காலமான பொங்கல் தீபாவளி போனஸாக ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டி*
*அனைத்து தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ பிஎப் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டி*
*ஆகிய கோரிக்கைகளை*
*நடந்து கொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில தலைமை அறைகூவல் விடுத்த அடிப்படையில்*
*13.4.2022 திருச்சி வெஸ்ட்ஸ் பள்ளியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது*
*22.4.2022 அன்று மணிகண்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அல்லித்துறை அதவத்தூர் நாச்சிகுறிச்சி ஆகிய கிராம நிர்வாக அதிகாரி VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் கைதாவது என அனைத்து கூட்டத்தில் ஏகமனதாக முடிவேடுக்கப்பட்டது*
*தோழமையுடன்*
*MR முருகன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர்*
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம்*
*தொடர்புக்கு8428053002 நன்றி*