*சோமரசம்பேட்டையில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது*
*பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு வணக்கம்*
*ஜீவா AITUC ஆட்டோ சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள வாசன் சிட்டி மற்றும் பஞ்சாயத்து ஆபிஸ் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் 8.4.2022 இன்று காலை 10:45 மணி அளவில் வாசன் சிட்டியில் வாசன் சிட்டி கிளை தலைவர் தோழர் SM சாகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் AITUC சங்க திருச்சி மாவட்ட துணைத் தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் AITUC கட்டட சங்க மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் N ரவிக்குமார் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினார்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாசன் சிட்டி கிளை செயலாளர் தோழர் T சௌந்தரராஜன் கிளை பொருளாளர் தோழர் AS ராஜா பஞ்சாயத்து ஆபீஸ் கிளை செயலாளர் தோழர் M சுதாகர் கிளை பொருளாளர் தோழர் N துரைப்பாண்டியன் கிளை தலைவர் தோழர் M சுரேஷ் தோழர் பிலோமின் மற்றும் ஆறுமுகம் R தேவன் அகஸ்டின் S ஸ்டீபன் K நடராஜ் B விஜயகுமார் T இங்கர் S பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டு*
*போராட்டத்தில் தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை உடனே வாபஸ் வாங்கு*
*புதிய மோட்டார் வாகன சட்டம் மூலம் லைசன்ஸ் எடுப்பது FC செய்வதற்கு கட்டணத்தை உயர்த்தியதை உடனே வாபஸ் வாங்கு*
*ஓலா உபர் போன்ற தனியார் நிறுவனங்களால் நாசப்படுத்தி வரும் ஆட்டோ தோழிலை பாதுகாக்க தனியார் நிறுவனங்களை தடை செய்*
*FC காலங்களில் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்கு*
*ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கு*
*ஆட்டோ தொழிலாளர்களுக்கு இயற்கை மரணம் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கு*
*ஆட்டோ தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கு*
*ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானியத்தில் ஆட்டோ வழங்கு*
*ஆட்டோ தொழிலாளர்களுக்கு அனைத்து வங்கியிலும் வட்டியில்லா கடனுதவி வழங்க நடவடிக்கை எடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது*
*முடிவில் வாசன் சிட்டி கிளை பொருளாளர் தோழர் AS ராஜா நன்றி கூறினார்*
*தோழமையுடன்*
*MR முருகன்*
*திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம்* *தொடர்புக்கு*
*8428053002*
*நன்றி*..