மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ச.பொற்செல்வன், எம்.பி.பி.எஸ், டி.பி.எச், அவர்களது மேற்பார்வையிலும், மதுரை ஏர்போர்ட் உதவி மருத்துவ அலுவலர் சுதர்ஷன், எம்.பி.பி.எஸ், மரு.முனீஸ்,எம்.பி.பி.எஸ், வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன்,எம்.பி.பி.எஸ், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு மருத்துவ அலுவலர் முருகானந்தம், எம்.பி.பி.எஸ், அவர்களது முன்னிலையிலும், ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அவர்களது உதவியுடனும், எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றிய ஒத்திகை இன்று 30-05-2026 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த நோய்த்தடுப்பு ஒத்திகையில், வலையங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் கேசவன், மணி, தினேஷ்குமார் மற்றும் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நோய் தடுப்பு ஒத்திகை முகாமில் ஆஸ்டின்பட்டி தொற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ்கள், பணியாளர்கள், மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆகியோர்களின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது.
ஒத்திகை முகாமில் நோய் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம், தங்களது பயணம் செய்த நாட்டு விபரங்கள், நோய்கள் பற்றிய அறிகுறிகள் கேள்விகள் கேட்கபட்டது.
அறிகுறிகள் தென்பெட்ட நபர்களை அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தோப்பூர் தொற்று நோய் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக அனுமதி அளித்த பின் விடுவிப்பது பின் தொடர் கண்காணிப்பில் இருக்கும்படி ஒத்திகை நடைபெற்றது.