கோடை வெயில் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இந்நிலையில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அய்யர் சமாதி என்ற இடத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் 5 மணி நேரமாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது மன்னார்குடியில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம் செல்லும் பிரதான சாலை அதிகாரிகள் செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது அய்யர் சமாது என்ற இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்ப்பட்டு குடிநீர் முழுவதும் வீணாகி வருகிறது இது குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வட்டார ஊராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் அளித்தும் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை பல லட்சக்கணக்கான குடிநீர் வெளியேறுவதை பார்த்த அருகில் இருக்கும் பொதுமக்கள் சாக்குகளை கட்டிகுழாய் மீது கற்களை அள்ளி வைத்து தண்ணீர் வெளியேறாமல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர் குழாய் உடைப்பு ஏற்பட்டு 5மணி நேரம் ஆகியும் இதுவரையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இன்னல்களை பெற்று வரும் நிலையில் மன்னார்குடி திருவாரூர் சாலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைத்து குடிதண்ணீர் மழுவதும் சாக்கடையில் கலந்துவீணாகி வருகிறது.
மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியம் … இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்து வருகிறது
தமிழர் களம் மாத இதழ்
0