உசிலம்பட்டி அருகே பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் பால் லிட்டர் 1 க்கு ரூ 10 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை பால் லிட்டர் 1 க்கு ரூ10 உயர்த்தி வழங்க வேண்டும், கலப்புத் தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற சூழலில் 

 இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட குழு சார்பில் விக்கிரமங்கலம் கிளை தலைவர் ரவி தலைமையில் 
மாவட்ட தலைவர்
மகேந்திரன்,
விக்கிரமங்கலம் விவசாய சங்க மாவட்ட தலைவர்
வேல்பாண்டி,
மாவட்டத் துணைச் செயலாளர்
ஜோதிபாஸ்,மாநில தலைவர் வெண்மணி சந்திரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதில் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை பால் லிட்டர் 1 க்கு ரூ10 உயர்த்தி வழங்க வேண்டும், கலப்புத் தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பால் கொள்முதல் செய்யும் இடத்திலே தரம், எடை, ஒப்புதல் சீட்டு வழங்க வேண்டும்,கூட்டுறவு சங்கங்களில் வழங்கிய பால் மாட்டுக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், மதுரை ஆவின் பொங்கல் போனஸ் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
Previous Post Next Post