நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம், அமைச்சா் ஆர். காந்தி பங்கேற்பு


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் கடம்பநல்லூர், கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, ஒன்றிய கவுன்சிலர் வரலட்சுமி அசோக்குமார், ஒன்றிய பொருளாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி பெருமாள், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்குச்சாவடி முகவர் ஜானகிராமன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் தாயுமானவர் அன்புக்கரங்கள் இன்னுயிர் காப்போம், போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக அரங்கில் தமிழ் நாட்டை திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், ஒன்றிய அவைத் தலைவர் புருஷோத்தமன், துணை செயலாளர் பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன், கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், BDA, BLC, உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post