எம்ஜிஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் எம் ஜி ஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம் ஜி.ஆர் . ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , ஒன்றிய செயலாளர்கள் மேற்கு தமிழ்செல்வம் ,கிழக்கு தமிழ் கண்ணன், உள்ளிட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மகளிரணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .முன்னதாக மன்னார்குடி தேரடியில் இருந்து அதிமுகவினர் பேரணியாக சென்று மறைந்த எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
எம்.ஜி.ஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .
தமிழர் களம் மாத இதழ்
0