இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா – கத்தியவாடியில் எழுச்சி நிகழ்ச்சி!



இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில், கழக நிறுவனத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ன் 109வது பிறந்தநாள் விழா, ஆற்காடு மேற்கு ஒன்றியம் கத்தியவாடி ஊராட்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட 1500 தாய்மார்களுக்கு தரமான புடவைகள் வழங்கப்பட்டன.

ஆற்காடு ஒன்றிய கழக செயலாளர் என்.சாரதி (எ) ஜெயச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், தலைமை கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் எம்.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் வி.கே.ஆர்.சீனிவாசன், மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.மணி, டபிள்யூ.எஸ்.வேதகிரி, கே.பி.கே.அப்துல்லா, ஜே.ரமாபிரபா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், தோழமைக் கட்சிகளான பாஜக, பாமக நிர்வாகிகள், அஇஅதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மற்றும் கத்தியவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பந்தல் ஜி.ராஜா நன்றியுரை வழங்கினார்.

கத்தியவாடி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி புதிய விளையாட்டு மைதானமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
Previous Post Next Post