ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார் உழைக்கும் பெண்கள் பணி மாவட்ட பொறுப்பாளர்கள் என் சோனியா சாவித்திரி உமா மாவட்ட கமிட்டி உறுப்பினர் எம் பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவக்குமார், லோகேஷ் மற்றும் மாநில மற்றும் மாவட்ட செயலாளர் சங்கர் மேஸ்திரி கண்டன உரையாற்றினர். அவர்கள் பேசும்போது தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன், தமிழக அரசு வழங்கும் வீடு வசதி திட்டத்தில் விண்ணப்பித்துள்ள அனைத்து பயனாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், வீடு கட்டும் நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும், ஓய்வூதியம் பெறும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், PF, ESI திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
Previous Post Next Post