பெயர் மாற்றம் – நிதி வெட்டு
மத்திய அரசை கண்டித்து இராணிப்பேட்டையில்
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
இராணிப்பேட்டை, டிச.30 :
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, திட்டத்திற்கான நிதியை வெகுவாகக் குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA) சார்பில், மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இராணிப்பேட்டையில் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் – கு.புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் – பா.உமாபதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் – ரா.பூபதி கோரிக்கை விளக்க உரையாற்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம், நிதி வெட்டு மற்றும் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் நிதிச்சுமை ஆகியவற்றை கடுமையாக கண்டித்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் – எஸ்.ஜோசப் கென்னடி துவக்க உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து,
அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், மாவட்ட தலைவர் – என்.சுந்தரேசன்,
அரசு ஊழியர் சங்கம், மாவட்ட தலைவர் – எம். எழில் இளம்வழுதி,
TNRDPA, அரக்கோணம் கோட்டம், கோட்ட தலைவர் – பொன்.வேதமுத்து,
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், மாவட்ட செயலாளர் – பி.ரகுபதி
உள்ளிட்ட பல்வேறு துறை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), மாநில பொதுச்செயலாளர் – க.பிரபு நிறைவுரையாற்றி, இந்த மக்கள்விரோத மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
முடிவில்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA), மாநில செயற்குழு உறுப்பினர் – ந.சத்தியவேலன் நன்றியுரை வழங்கினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.