திண்டிவனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று  திண்டிவனம் மேம்பாலத்தில் கீழ் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் பி வெங்கடேசன் தலைமையில் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்.
மாவட்ட கழக செயலாளருமாகிய எல்.வெங்கடேசன் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த்தின் 
திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர செயலாளர் காதர் பாஷா,
மரக்காணம்  ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகி சிவ செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
Previous Post Next Post