அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் சாதி வெறியர் பிடிஓ
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சாத்தூர் ஊராட்சியில் நிர்வாக செயல்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் சா.மா.சேட்டு பதவி ஏற்றது முதல் நாள் முதலே, அதே ஊராட்சி துணைத்தலைவரால் பல்வேறு தடைகள், அழுத்தங்கள், மற்றும் சீர்கேடுகளை எதிர்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சாத்தூர் ஊராட்சியின் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வழங்கும் பைப்லைன் உடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது இதனால் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக குளம், கிணறு சுற்றி அலைந்து வருவதாகவும், கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி நிலவுவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் கிராம மக்கள் BDO வெங்கடேசன் மீது நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தனர்:
சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் பைப்லைன் வேலைக்கு ரூ.17,000 வவுச்சரில் ஸ்கீம் பீடிஓ வெங்கடேசன் உடனே கையெழுத்திடுகிறார்.
ஆனால் ஆதிதிராவிடர் பகுதியில் பைப்லைன் பணி செய்ய ரூ.7,000 மதிப்பிலான வவுச்சருக்கு கூட கையெழுத்திட மறுக்கிறார்.
மேலும்,
ஆதிதிராவிடர் பகுதிக்குள் வரத் தயங்குகிறார்
அவர்களின் பிரச்சனைகளை பார்வையிட மறுக்கிறார்
சாதி அடிப்படையில் முடிவுகள் எடுத்து வருகிறார்
என்று பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்
இதனால் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில்
மின்விளக்குகள், பைப்லைன் பழுது, குடிநீர் குறைபாடுகள் போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்குக் கூட தீர்வு காண முடியாத நிலை உருவாகியுள்ளது.
என வருத்தம் தெரிவித்தனர்.
ஆதிதிராவிடர் பகுதியில் உடைந்த பைப்லைனை உடனடியாக சரிசெய்து
சாத்தூர் ஊராட்சிக்கு நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும்
மேலும்
தீண்டாமையை கடைப்பிடித்து சாதி வன்மத்தோடு நடந்து ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் ஸ்கீம் பீடிஓ வெங்கடேசன் மீது, துறை சார்ந்த அதிகாரிகளும்,
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சா.மா சேட்டு கூறுகையில்
சாத்தூர் ஊராட்சியில் 18 மாதங்களாக நிரந்தர ஊராட்சி செயலாளர் நியமனம் செய்யப்படாததால், எந்தப் பணியும் ஆவண ரீதியாக செயல்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. பல முறை கோரிக்கை வைத்தும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஊராட்சி செயலாளரை நியமனம் செய்யாததால் ஊராட்சி பட்ட பகுதிகளில் ஏற்படும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என தலைவர் சா.மா.சேட்டு தெரிவிக்கிறார்.
சாத்தூர் பொதுமக்களின் கோரிக்கை சம்பந்தமாக பீடிஓ வெங்கடேசனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் முன்னுக்குப் பிறனாக பதில் சொல்லி உடனே அலைபேசியை துண்டித்துக் கொண்டார்.
மக்களின் நலனுக்காக தான் அரசும் அரசு அதிகாரிகளும்
பெரும்பாலும் அதிகாரிகள் சாதி மதத்தைக் கடந்து மக்களுக்கான பணியில் நவடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் சாதி உணர்வோடு நடந்து கொள்வது என்பது ஜனநாயக மாண்பிற்கு முரணானது இது போன்ற அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கவனம் வைத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது.