இடஒதுக்கீடு தொடர்பான நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை குறித்து வன்னியர் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளர் நல்லூர் எஸ்பி சண்முகம் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாவட்ட செயலாளர்
கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர்
அம. கிருஷ்ணன், எம். எஸ். மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மோகன்தாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், மேற்கு மாவட்ட தலைவர் அஜய் ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் மாநில அமைப்பு துணைச் செயலாளர் காளிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
வன்னியர் சமூகத்தின் நீண்டநாள் இடஒதுக்கீட்டு கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அவர் பேசும்போது
மாநிலத்தில் சமூக நீதியை நிலைநிறுத்த, ஒவ்வொரு சமூகத்துக்கும் அவர்களின் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப நியாயமான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு சமூகங்களின் உண்மையான மக்கள் தொகை விவரங்கள் வெளிப்படையாக அரசு பதிவாக்கினால், இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் துல்லியமாக அமையும் என்பதை போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்
ஏற்கனவே சட்டமாக இயற்றப்பட்ட இந்த 10.5% இடஒதுக்கீடு நடைமுறையில் செயல்படாததால், வன்னியர் சமூக இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில்
மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர்.