திமிரியில் ராணிப்பேட்டை மாவட்ட 6ஆம் கராத்தே போட்டி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட 6ஆம் கராத்தே போட்டி (Junior, Sub Junior, Cadet, U-21 & Senior) திமிரி தி கிரூசர் அகாடமி சீனியர் செகண்டரி CBSE பள்ளியில்   நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 330-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் இதில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட TSKA மாநில துணைத் தலைவர் ஹன்சி ரமேஷ்  போட்டியை துவக்கி வைத்து, மாணவர்களின் திறமையை பாராட்டினார். தொடர்ந்து, தி கிரூசர் அகாடமி பள்ளியின் தலைமை நிறுவனர் மற்றும் சேர்மன் ராஜன், தாளாளர்  சிந்துராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தற்காப்புக் கலையின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, வெற்றி பெற்ற மாணவ—மாணவிகளை பாராட்டி பரிசளித்தனர்.

இப்போட்டியை சிறப்பாக முன்னெடுத்து நடத்த உதவிய TSKA மாநில தலைவர் ஹன்சி ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஹன்சி அல்தாஃப் ஆலம் ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்த இணைந்த சங்க நிர்வாகிகள் — சேர்ந்தவர் சென்சாய் வாசுதேவன், செயலாளர் சென்சாய் கார்த்தி, பொருளாளர் சென்சாய் விக்னேஷ், டெக்னிக்கல் டைரக்டர் சென்சாய் தேவராசன், ரெஃப்ரி கமிஷன் சேர்மன் சென்சாய் லிங்கமூர்த்தி, Coach வெற்றிவேல் மற்றும் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் — அனைவருக்கும் தலைவர் R. மாரிமுத்து  நன்றியை தெரிவித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே மாணவ—மாணவிகள் வரவிருக்கும் 2026 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் மாநில கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post