வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு.


  
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்


வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணிகளை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கைமான் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 83-ரெகுநாதாபுரம், அவளிவநல்லுர்,  விளத்தூர், களத்தூர், வீராணம், ஆவூர், கோவிந்தக்குடி, 44-ரெகுநாதாபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை ஆர்.காமராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டு எவ்வாறு செயல்பட வேண்டுமென்று ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்


Previous Post Next Post