திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விழல்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஏழை ஏளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இத்தகைய பகுதியில் விழல்கோட்டகம் வழியாக கோரையாற்றில் செல்லும் இணைப்பு நடைபாலம் கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்து வந்த நிலையில் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துவருகிறது. இத்தகைய இணைப்பு பாலத்தை சீரமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் பலமறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை பாலத்தை சீரமைத்து தர எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் விழல்கோட்டை ஊராட்சியின் இணைப்பு பாலத்தின் வழியாக தேவங்குடி கீழ்பாதி, விழல்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், கர்ப்பணி பெண்கள் என பல்வேறு தரப்பினரும் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணித்து அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மிகுந்த முக்கியத்துவம் உடைய இப்பாலத்தின் கீழ்பகுதி மற்றும் பாலத்தின் இருபுறமும் உள்ள பாதுகாப்பு தடுப்பு அரண்கள் ஆங்காங்கே சிதலமடைந்து இருந்துவருவதால் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில் மரண பயத்துடன் கிராம மக்கள் இணைப்பு பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். பாலத்தின் ஆபத்தான நிலையினை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் மழைக்காலமாக இருந்து வருவதால் போர்க்கால அடிப்படையில் மக்கள் அச்சமின்றி பயணிக்க ஏதுவாக ஒர் இரு நாளில் சீரமைத்து தருவதோடு, மழைக்காலம் முடிந்தவுடன் நிரந்தர தீர்வாக பாலத்தை முழுவதுமாக இடித்து புதிய பாலத்தை கட்டித்தர தக்க நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்க முன்வரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
1, நடராஜன் விழல்கோட்டகம்