சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளா கத்தில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் பேராசிரியர்கள் இரா.முத்து வேலாயுதம்,துரை அசோ கன், செல்வராஜ், தனசேகரன், செல்ல பாலு, ஜான் கிருஸ்டி, காயத்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகை மற்றும் முனைவர் பட்ட ஊக்கத்தொகைகளை உடனே வழங்கிட வேண்டும். அயற்பணியிட ஆசிரியர்களை உடனே உள்ளெ டுப்பு செய்தல், பல்கலைக்கழக துறைகளில் உள்ள காலிப்ப ணியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யு.ஜி.சி. தமிழக அரசின் விதிமுறைகளின்படி நிரப்பிடவேண் டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர மேற்கண்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டமும், தேர்வு புறக்கணிப்பு போராட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது