முத்துப்பேட்டை தர்ஹாவில் 724-ம் ஆண்டு கந்தூரி விழா- சந்தனக்கூடு ஊர்வலம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

உலகப்புகழ் பெற்ற முத்துப்பேட்டை  ஜாம்புவானோடை தர்ஹாவில் 724-ம் ஆண்டு கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கானோர்  பங்கேற்றனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை-உலக புகழ்பெற்ற ஜாம்புவானோடை தர்ஹா  மஹான் செய்கு தாவூது ஒலியுல்லா  ஆண்டவரின் 724 வது ஆண்டு  பெரியகந்தூரிவிழா கடந்த 23ம்தேதி தர்கா  முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.


இதனை தொடர்ந்து இன்று  பத்தாவது நாள் முக்கிய நிகழ்வான   சந்தனக்கூடு விழா கோலாகலமாக  நடைபெற்றது 
 முன்னதாக  புனித சந்தன குடம் தலையில் சுமந்து எடுத்துவரப்பட்டு கண்ணாடிகளால் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து , வானவேடிக்கை 
மேளதாளங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது.

 தர்காவிலிருந்து   அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு  ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து அதிகாலை  புனித ரவுலாஷரிபுக்கு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது  

இந்த விழாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


சந்தனக்கூடு விழாவை  முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
Previous Post Next Post