திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதியில்
நடைப்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்.
நன்னிலம், நவ.02
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமினை திருவாரூர் அதிமுக மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில், கண் புரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட நோய்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் குழந்தைகளின் கண் நோயான பிறவி கண்ணீர் அழுத்த நோய் மற்றும் மாலைக்கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இம்முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்ட மருத்துவ பயனாளிகள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வில், முன்னாள் எம்பி டாக்டர் கே. கோபால், நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சி.பி.ஜி.அன்பு, நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் இராம.குணசேகரன், தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆா்.கே.இனியன், குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் சிறுகுடி ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல இணை செயலாளர் செல் சரவணன், பேரளம் நகரச் செயலாளர் திலகம் சுந்தரமூர்த்தி மற்றும் புதுவை அரவிந்த் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகாஷ், பத்ரி, ஓஜாஸ் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம், வலங்கைமான், குடவாசல், எரவாஞ்சேரி பகுதிகளில் இலவச கண் பரிசோதனை மூலம் நடைபெற இருக்கிறது.