திருவாரூரில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியை நகர மன்ற தலைவர் புவனப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்ட போட்டியில் 500க்கும் மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.



திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று நடைபெற்றது இந்த போட்டியை திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் பிரிவு மற்றும் மாணவிகள் பிரிவு என இரண்டு பிரிவுகளாக சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தெற்கு வீதி கீழ வீதி வடக்கு வீதி வழியாக மீண்டும் நகராட்சி வரை சென்ற நிறைவடைந்தது. தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர்.
Previous Post Next Post