தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக, கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால், தெருக்கூத்துக் கலைஞர் கே.எம்.ராமநாதன் அவர்களின் கலைத்திறனை பாராட்டி சிறந்த தெருக்கூத்து கலைஞருக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டதனை தொடர்ந்து இன்று கலைமாமணி அவர்கள்ப மாவட்ட கழக செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றார். அவரது கலைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்தினார் இந்த நிகழ்வில் மாவட்ட மீனவர் அமைப்பாளர் வடிவேலன் முன்னாள் பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மாவட்ட பிரதிநிதி செந்தில், ஊராட்சி பொறுப்பாளர் வேல்முருகன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சகாதேவன் கிருஷ்ணகிரி