தேனி மாவட்டம்ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் சாக்கடை கால்வாய் கீழ்புறம் வசிக்கும் ஆதிக்க சாதியினர் மரித்து பள்ளம் தோன்டிய அவல நிலை தீர்க்குமா திராவிட மாடல் அரசு.?



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜகோபாலன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட  அம்பேத்கர் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் பொதுமக்கள் சுமார் 300 குடும்பம்  வசித்து வருகின்றனர். 

கீழ்புறம் ஆதிக்க சாதியினர் வசித்து வருவதாக கூறுகிறார்கள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை மேலும் இப்பகுதியில் செல்லக்கூடிய சாக்கடை கால்வாய் கீழ்புறம் உள்ள ஆதிக்க சாதியினர் பகுதிக்கு வரக்கூடாது. என பள்ளம் தோண்டி தடுக்கப்பட்டிருப்பதாக புகார் கூறுகிறார்கள் பொதுமக்கள் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் இரா தமிழ்வாணன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு இப்பகுதி பொதுமக்களிடம் தங்களது குறைகளை கேட்டு அறிந்தார். இதனைத் தொடர்ந்து சாதியவாதிகள் எங்கள் பகுதிக்குள் அம்பேத்கர் நகர் கழிவு நீர் உள்ளே நுழையக்கூடாது. என்று திட்டமிட்ட அம்பேத்கர் நகர் முடிவு பகுதியில் பெரிய பள்ளம் தோண்டி சாக்கடை கால்வாயை தேங்க வைத்துள்ளனர் இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 மேலும் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால் தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாதிய உள்நோக்கத்தோடு செயல்படும் தனி நபர்களையும் அதிகாரிகளையும் கண்டித்து சாக்கடை கால்வாயை இணைத்து சுகாதாரமான பகுதியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள் இம்முறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என  தெரிவிக்கிறார்கள்.

 இந்நிகழ்வில் தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் இரா தமிழ்வாணன் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துராமன் கதிர் நரசிங்கபுரம் செல்வம் ராஜகோபாலன் பட்டி முகாம் செயலாளர் கணேசன் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.....
Previous Post Next Post