தேனி மாவட்டம் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!



கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதி அரசர் பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச்சு நடத்திய ராஜேஸ் சர்மா வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மீது பொய் புகார் கூறியுள்ள ராஜீவ்காந்தி மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் உத்தமபாளையம் 
தேனி மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 மாண்புமிகு நீதி அரசர் பிஆர்.கவாய் மீது  செருப்பு வீச்சு  சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது அதேபோன்று நேற்றைய தினம் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது நடைபெற்ற சம்பவத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி மீது பொய் புகார் கூறிவரும் ராஜீவ்காந்தி மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பூபா சட்டத்தின் கீழ் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து இவர்களது வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக அரசையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திடீரென கட்சியைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினார். 
பின்னர் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிகழ்வில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் இரா மதன் தலைமை தாங்கினார், தேனி திண்டுக்கல் மண்டல துணைச் செயலாளர் சோ.சுருளி கண்டன முழக்கம் எழுப்பினார், 
 மாவட்டத் துணைச் மேற்கு மாவட்ட பொருளாளர் பெர்க்மான்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் முல்லை பாரதி கம்பம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் கா. முருகேசன்,
 மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.எஸ்.அந்தோணி, மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் அயூப்கான்,
 பஞ்சமி நிலம் மீட்பு மாவட்ட அமைப்பாளர் கம்பம் மோகன், 
முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சின்னமனூர் வழக்கறிஞர் மணிகண்டன்,
 சாம் வளவன், உத்தமபாளையம் சிறுத்தை பாபு, கோவிந்தன் பட்டி சந்திரன், தேவாரம் அஜித்குமார், அருள் பிரபு, ரபீக்,  பிச்சைமுத்து மற்றும் எழுச்சித் தமிழர் ஆட்டோ ஓட்டுநர்கள் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தோழர்கள் என மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், முகாம், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.....
Previous Post Next Post