திண்டிவனத்தில் தொழிற்சங்கத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இணைப்பு விழா.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் கட்டுமான தொழிலாளர்கள் இணைப்பு விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பாலா,ஒருங்கிணைப்பாளர் மனோகரன்,வழக்கறிஞர் பிரிவு அணி செயலாளர் மகாதேவன், உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரியா, பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட கட்டுமான கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இதர அமைப்பைச் சார்ந்தவர்கள் சங்கத்தில் இணைந்தனர்.இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த இராமநாதன், தலைவர் முருகேசன் செயலாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் கிருபாகரன், குப்புசாமி, ராஜேஷ், எட்டியப்பன், தாமோதரன், விஸ்வநாதன், வேலாயுதம், தேவன், பெருமாள், மதன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, ஃப்ரண்ட் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் கட்டுமான தொழிலாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்