ராணிப்பேட்டை மாவட்டம்
முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது
அனைத்து பணியாளர்களுக்கும் பாரபட்சம் இன்றி எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
மேலும் ஏற்கனவே வழங்கிய 10% HRA -யை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் 2021 ஆம் ஆண்டு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் மற்றும் கருணை ஓய்வூதியத்தினை ஐந்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
புதிதாக பணியில் சேரும் விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கணினி பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் வரவேற்புரைமாவட்ட தலைவர் Bhuvan.சுந்தரராஜன் பொருளாளர் கமலநாதன் முன்னிலை வகித்திருந்தார்
மேலும் மாவட்ட செயலாளர் சேதுபதி சிறப்புரையாற்றினார்
மேலும் இதில் பொன்னுரங்கன், ராமச்சந்திரன், தனசேகரன், ஸ்ரீராம், என ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர்