ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு அருகே காளியம்மன் கோவில் தெருவில் அருள்பாவித்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி மகா உற்சவ விழா வெகு விவரசையாக நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு அருகே காளியம்மன் கோவில் தெருவில் அருள்பாவித்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி மகா உற்சவ விழா வெகு விவரசையாக நடைபெற்றது


முன்னதாக கடந்த 22 ஆம் தேதி மாலை ஆலயத்தில் அருள் பாவித்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு அபிஷேகமும் கடக ஸ்தாபனமும் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு நவராத்திரி சிறப்பு பூஜையும் வெகு விமர்சியாக நாள்தோறும் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இன்று ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமெண்டல் ஈஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு நாளான இன்று ஸ்ரீ காளிகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து கலச யாக பூஜைகளை மேற்கொண்டு பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ஸ்ரீ காளிகாம்பாள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர் வாகனத்தில் பல்வேறு மேல தாளங்கள் முழங்க வெகு விமர்சியாக ஊர்வலமாக வீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது

இதில் ஏராளமான பக்தர்கள் வீதி உலா பவனி வந்த ஸ்ரீ காளிகாம்பாள் அம்மனை தரிசனம் செய்து அருள் பாவித்தனர்
Previous Post Next Post