பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரர் கிராம மக்கள் பாராட்டு .
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் பங்கேற்றனர். 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டிகளில் முதல் முறையாக இந்த ஆண்டு கபடி சேர்க்கப் பட்டது. ஆண்கள் பிரிவில் 14 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொண்டன. இந்திய ஆண்கள் அணியில் தமிழ்நாட்டில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் இவரது தந்தை மோகன்தாஸ் 2013 ஆம் ஆண்டு விபத்தில் இறந்து விட்டார் .தாய் தனலட்சுமி அங்கன்வாடி ஊழியாரன இவரது வளர்ப்பிலேயே வளர்ந்து வந்தார் . கபடி விளையாட்டில் அதித ஆர்வம் கொண்டு . 7 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேனி எஸ்டிஏடி பள்ளியில் விளையாட்டு விடுதியில் தங்கி படித்தார் . பின்பு தொடர் கபடி விளையாட்டின் மூலம் வேல்ஸ் கல்லூரியில் பி ஏ எகனாமிக்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருவதோடு மட்டு மல்லாது . ஆசிய அளவிலான கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த வீரரான அபினேஷ் மோகன்தாஸ் விளையாடியது வடுவூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கபடி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆண்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை 35-32 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. அபினேஷ் மோகன்தாஸ் பங்கேற்று விளையாடி இந்திய ஆண்கள் கபடி அணி தங்கம் வென்ற செய்தி வடுவூர் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
பேட்டி
1. தனலட்சுமி அபினேஷ் தாயார்
2. ஞானஸ்கந்தன் கிராமவாசி