லப்பபேட்டையில் மாற்று கிராமத்தைச் சேர்ந்த தனிநபருக்கு பொது இடத்தில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை

லப்பபேட்டையில் மாற்று கிராமத்தைச் சேர்ந்த  தனிநபருக்கு பொது இடத்தில்  வழங்கப்பட்ட பட்டாவை 
 ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை 

 அக்டோபர் 13  ஆற்காடு அடுத்த லப்பப்பேட்டை கிராமத்தில், மண்பாண்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில், பொது இடத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அத்துமீறிப் பட்டா பெற்றதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து லப்பப்பேட்டை கிராமத்தின் விஏஓ, இரு தரப்பினரிடமும் நேரில் விசாரணை நடத்தினார். 

மண்பாண்டத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமும், சுப்பிரமணியத்திடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்த விசாரணை அறிக்கையை விஏஓ, துறைசார்ந்த மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வதா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து மேலதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post