தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின்2-மாவட்ட மாநாடு திண்டிவனத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது
. மாநில பொதுக்குழு உறுப்பினர் மேரி வினோதினி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் மாநில பொதுச் செயலாளர் பர்வதராஜன், ஆசிரியர்கள் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், திண்டிவனம் நகர மன்ற உறுப்பினர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் இதில் பதவி உயர்த்தப்பட்ட பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் நிறுவனர் ராமமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் தியாகராஜன் ,சங்க நிர்வாகிகள் பரந்தாமன், நெடுமாறன், ஏழுமலை, சுப்பிரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக மாநில துணைத்தலைவர் தியாகராஜன், விழா நிறைவுரையற்றினார் இக்கூட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசும் கொரோனா காலத்தில் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். மத்திய அரசு 2020 தேசிய கல்விக் கொள்கையை கைவிட்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும், அனைவருக்கும் ஓய்வு தியம், போதுமான ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியம், மருத்துவ சேவைகளுக்கான உரிமை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை ராமச்சந்திரன், வினை தீர்த்தான், செல்வகுமார் ,ஹெலன், வீரராகவன், வேலு, முரளிதரன், மரிய அந்தோணி, விருஷபதாஸ், அன்பழகன், இயேசுபால், ஆகியோர் முன்மொழிந்தனர் இந்த தீர்மானங்களை நமச்சிவாயம், சேரன், அன்பரசன், மனோகரி, செல்வராஜ், கோவிந்தன், ராமமூர்த்தி, கலைமணி, அருள்ராஜன், சுந்தர்ராஜன், முனைவர் பழ சம்பத், ஆகியோர் வழிமொழிந்தனர் மாவட்ட பொருளாளர் மரியதாஸ் அனைவருக்கும் நன்றி கூறினார்