தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் கணவன் மனைவிக்கிடையே குடும்பபிரச்சனை காரணமாக இரண்டு மகள்களையும் தந்தை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து வந்திருந்த நிலையில் இரண்டு சிறுமிகள் மற்றும் அவருடைய தந்தை உடல் வைகை அணையின் கரைப்பகுதியில் இருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளது.!



தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி பிரியங்கா இவர்களுக்கு 7 வயதில் தாரா ஸ்ரீ என்ற சிறுமியும், 5 வயதில் தமிழிசை என்ற  சிறுமியும் உள்ளது.

இன் நிலையில் கணவன் -மனைவி இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தனது குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக தந்தை இரண்டு பெண் குழந்தைகளையும் மனைவியிடமிருந்து அழைத்து வந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் தற்போது பிணமாக வைகை அணை நீர்தேக்க பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது வைகை அணை கரைப்பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி உடல் தீயணைப்புத் துறையினர் தற்போது மீட்டு விட்டனர்.

இவர்களின் தந்தை மற்றும் மகள்களை காணவில்லை என பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் அவரது மனைவி பிரியங்கா புகார் அளித்திருக்கும் நிலையில்.

கிருஷ்ணமூர்த்தியும் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளை ஆற்றில் தூக்கி வீசி எறிந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

 பல மணி நேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தி உடலை தீயணைப்புதுறையினர் வைகை அணை ஆற்றுப்பூரில் சடலமாக மீட்டனர்.

 தந்தை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளின் சடலங்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்காக  காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

 வைகை அணை காவல்துறையினர் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர்  தற்கொலை செய்த கொண்ட கணவர் பெண்பிள்ளைகள் காரணம் என்ன என்று மனைவி மற்றும் உறவினரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....
Previous Post Next Post