கம்பம் நகர் பகுதி வழியாக கேரளாவிற்கு கஞ்சா விற்பனை செய்ய வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 46.500 கிலோ கஞ்சாவையும் அவர்கள் வந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.!


 

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ஆந்திராவில் இருந்து விற்பனை செய்வதற்காக ஒரு குடும்பத்தினர் சொகுசு காரில் கம்பம் நகர் பகுதி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து கேரளாவிற்கு செல்லும் கம்பம் மெட்டுச் சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆந்திரா பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று வருவதை பார்த்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்தக் காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் மற்றும் சிறுவன் உட்பட நான்கு பேர் வந்துள்ளனர்.
அப்போது அவர்களது காரில் சோதனை செய்ததில் டிராவல் பேக்கில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 46.500 கிலோ கஞ்சா கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களை போலீசார் விசாரணை செய்ததில்  ராஜேஷ் கண்ணன்,
பில்லி ராமலட்சுமி அவரது மகன்
துர்கா பிரகாஷ், மற்றும் 16 வயதுடைய அவர்களது மகன் சிறுவன் சூரிய சந்திரா ஆகியோர் சுற்றுலா செல்வது போல் ஆந்திராவில் இருந்து வருகை தந்து கேரளாவிற்கு கஞ்சாவினை கடத்திச் சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 46.500 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் வந்த சொகுசு காரினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட நான்கு பேரும் கஞ்சா விற்பனைக்காக வருகை தந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது.....
Previous Post Next Post