நெல் கொள்முதல் சாக்கு தட்டுப்பாடு
கிறிஸ்டி நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த லாரி நெல் இயக்க உரிமம் கொடுக்கப்பட்டதால் டெல்டாவில் இயக்கம் தடைபட்டுள்ளது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
பி ஆர் பாண்டியன் இன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஓகை, அரசூர், இலையூர் பகுதிகளில் மழையால் சாய்ந்து அழிந்து போன நெல் கதிர்களையும் கொள்முதல் நிலையங்களையும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய பின்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் தடைப்பட்டுள்ளது.
50000 ம் ஏக்கருக்கு மேல் கதிர் வந்த நிலையில் சாய்ந்து அழுகத் தொடங்கி இருக்கிறது.அழுகும் பயிரை அறுவடை செய்ய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள்.
இலையூர் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஒரு சில கொள்முதல் நிலையங்களில் நிபந்தனங்களைச் சொல்லி கொள்முதலை தடுத்து வருகிறார்கள்.
தமிழக அரசு தானே பொறுப்பேற்று கொள்முதலை தீவிர படுத்த வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டியது நிலுவையில் உள்ளது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொள்முதலை தீவிர படுத்த வேண்டும். நிபந்தனை இன்றி கொள்முதல் செய்திட முன்வர வேண்டும். ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக அரவை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் .
அரவை ஆலைகளுக்கு ஈரப்பதத்தை கணக்கில் கொண்டு அவர்களுடைய அரிசி இலக்கை குறைக்க வேண்டும். வருங்காலத்தில் விவசாயிகளிடம் ஈரப்பதத்திற்கு ஏற்ப எடைக்கான உரிய தொகையை பிடித்தம் செய்து கொள்வதற்கான வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். ஏற்கனவே மாய்ச்சர் கட் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது நினைவு படுத்துகிறேன்.
கிரிஸ்டி என்கிற நிறுவனம் தமிழகம் முழுமையிலும் நெல்லை இயக்கம் செய்வதற்கு லாரி ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் மண்டல முதன்மை மண்டல மேலாளர்கள் கட்டுப்பாட்டில் இயக்கம் செய்யப்பட வேண்டிய லாரி உரிமையாளர்கள் அதிகாரிகளுக்கு கட்டுப் படுவதில்லை. எனவே கிறிஸ்டி நிறுவனத்திற்கு கொள்முதல் செய்த நெல்லை விரைந்து இயக்கம் செய்வதற்கான பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்.நெல் இியக்கம் தடை ஏற்பட்டு ஏற்படும் இழப்பிற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள கிறிஸ்டி நிறுவனம் பொறுப்பேற்க செய்ய வேண்டும். அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு இயக்கத்திற்கு அவர்களை பொறுப்பாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குருவை அறுவடை பயிர்கள் சம்பா பயிர்கள் குறித்து வெளிப்படையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை துறை மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதற்கு வேளாண்மை துறை முன் வர வேண்டும்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் குலவாசல் ஜி சரவணன், குடவாசல் ஒன்றிய தலைவர் சுவாமிநாதன்,
கௌரவத் தலைவர் சுரேஷ், குடவாசல் நகர செயலாளர் ரமேஷ்பாபு, உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள்உடன் இருந்தனர் இதனை தங்கள் ஊடகம் பத்திரிகைகள் வெளியீட்டு உதவிட வேண்டுகிறேன்.
அரசூரில் கதிர்கள் சாய்ந்து நீரால் சூழப்பட்டு அழிந்து வரும்பயிர்களை காப்பாற்ற நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதை நேரில் பார்வையிட்டார். அழுகிய பயிரையும் பார்வையிட்ட படம்